பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்றம் 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரபரப்பை உண்டாக்கி இருப்பது அதிமுக பொதுக்குழு வழக்கு தான். கடந்த 10 மற்றும் 11 ஆகிய 2 தினங்கள் விசாரணை நடத்திய நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே நீதிமன்றத்துக்கு வந்து காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில் 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+1
+1
+1
+1
+1
+1
+1