ஈபிஎஸ் ஓபிஎஸ் -கட்டாய கல்யாணம்: உச்ச நீதிமன்ற கருத்து பற்றி செம்மலை சீற்றம்!

அரசியல்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு விவாகரத்து ஆன கணவன் மனைவியும் சேர்ந்து குடும்பம் நடத்துங்கள் என்று சொல்வது போல் உள்ளது என எடப்பாடி ஆதரவாளர் செம்மலை கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னம் கேட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளரை பொதுக்குழுவைக் கூட்டி முடிவு செய்யுங்கள். பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரையும் அனுமதிக்க வேண்டும்.

அவைத்தலைவர் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். பொதுக்குழு முடிவு செய்யும் வேட்பாளரை அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அவைத் தலைவரின் பரிந்துரை மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து புதிய தலைமுறைக்கு கருத்து தெரிவித்து பேசியுள்ள எடப்பாடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செம்மலை,

“சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கொடுத்த தீர்ப்பு செல்லுமா, செல்லாதா? ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லுமா, செல்லாதா? என அந்த ஒரு கேள்விக்குத்தான் உச்சநீதிமன்றம் பதில் சொல்ல வேண்டும். தீர்ப்பு சொல்ல வேண்டும்.

ஆனால், இன்றைக்கு அவர்கள் சொல்லி இருப்பதை தீர்ப்பாக நான் கருதவில்லை.
அந்த ஆலோசனை எப்படி இருக்கிறது என்று சொன்னால் கீழ் கோர்ட்டில் தான் பஞ்சாயத்து பண்ணுவார்கள், அரசியல் கட்சிகளை வைத்து.

உச்சநீதிமன்றத்திற்கு என்ன வேலை என்று சொன்னால் இன்டர்ப்ரெட்டேஷன் ஆப் லா. சட்டத்தை வியாக்கியானம் செய்து தீர்ப்பு சொல்ல வேண்டும்.

ஆனால், அவர்கள் பஞ்சாயத்து பண்ண வேண்டிய அவசியம் என்ன? இதற்கான காரணம் என்ன? கட்டாய கல்யாணம் செய்ய வற்புறுத்துவதைப் போன்று உள்ளது.

உச்சநீதிமன்றத்தினுடைய இந்த ஆலோசனை. கட்டாய கல்யாணம் கூட அல்ல, விவாகரத்து ஆன கணவனையும் மனைவியையும் சேர்ந்து குடும்பம் நடத்துங்கள் என்று சொல்வதைப் போல் உள்ளது. இது எப்படி சாத்தியமாகும். ” என கேள்வி எழுப்பினார்.

பிரியா

+1
0
+1
3
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

1 thought on “ஈபிஎஸ் ஓபிஎஸ் -கட்டாய கல்யாணம்: உச்ச நீதிமன்ற கருத்து பற்றி செம்மலை சீற்றம்!

  1. ஏனுங்ண்ணா, விவாகரத்து ஆனவங்க மீண்டும் சேர்ந்து வாழக்கூடாதுனு சட்டம் இருக்கா? அல்லது அவங்க மனசு மாறி சேர்ந்து வாழக்கூடாதா?

Leave a Reply

Your email address will not be published.