supreme court accept ops request

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!

அரசியல்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையை ஒரு வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. supreme court accept ops request

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் பொதுச்செயலாளர் தேர்தல் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளதால் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லும் என்பதால் மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு உத்தரவிட்டார்.

தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதி அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக்,

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துக் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவிருந்தது.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை கடிதம் அளித்திருந்தார்.

ஆனால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க கூடாது. இன்றே விசாரிக்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று எதிர்த்தரப்பு முன்னதாகவே கோரிக்கை கடிதம் கொடுத்துள்ள நிலையில் அதனை வெறுமனே நிராகரிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

செல்வ கணபதி சிறை தண்டனை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

நாய் கஞ்சி: வயதானவர்களின் சொல்ல மறந்த கதைகள்… என்று மாறும் இந்த அவலம்? Data Story

வேலைவாய்ப்பு : எஸ்.எஸ்.சி-யில் 26,146 காவலர் பணி!

டிஜிட்டல் திண்ணை: பிரதமர் யார்? காங்கிரஸ்-பாஜகவுக்கு ஸ்டாலின் மெசேஜ்?

supreme court accept ops request

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *