அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 12) ஒத்தி வைத்தது.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஓ.பன்னீர் செல்வம். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சார்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதுபோன்று தேர்தல் ஆணையம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த இடைக்கால மனுவை விசாரிக்கக் கூடாது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அலுவல் நேரம் முடிந்ததால் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரியா