தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து கூட்டணியை உறுதி செய்யும் என்று நம்புவதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 25) மாலை நடைபெற்றது.
அப்போது, பாஜக உடனான தேசிய ஜனநாயக கூட்டணியை முறித்துகொள்வது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், ”மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக என்ற தலைமையில் தான் கூட்டணியில் அங்கம் வகித்தோம். இரு கட்சிகளின் நலன் விரும்பியாகவே ’தமாகா’ செயல்பட்டு வந்தது.
ஆனால் கருத்து வேறுபாட்டால் துரதிர்ஷ்டவசமாக அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் முரண்பட்ட கொள்கை கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளதை பலமுறை நாம் பார்த்துள்ளோம்.
தமாகா சார்பில் இருகட்சிகள் இடையேயான கருத்து வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளேன். அதற்கேற்ப தேர்தல் நெருங்கும் நேரத்தில் வலிமையான இரு கட்சிகளும் சேர்ந்து கூட்டணியை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்.” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அர்ச்சகர்கள் நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பாஜகவுடன் கூட்டணி இல்லை: அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தில் முடிவு!
Comments are closed.