பாஜக தேசிய தலைவர் நட்டாவை, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை இன்று (ஏப்ரல் 6) நேரில் சந்தித்தார்.
கடந்த மாதம் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தை போர் முற்றியது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி குறித்தும் பேச்சுகள் எழுந்தன.
அப்போதுதான் நியூஸ்18 நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது என்றார். அதன்பிறகு, பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கூட்டணி எதையும் அமித்ஷா இறுதி செய்யவில்லை” என்று கூறியிருந்தார்.
இந்தச்சூழலில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை பாஜகவின் முக்கிய, மூத்த தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.
சமீபத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய தம்பிதுரை நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 6) பாஜக தேசிய தலைவர் நட்டாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது கர்நாடக தேர்தல் தொடர்பாகவும், அதிமுக – பாஜக கூட்டணி குறித்தும் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடி, அமித்ஷா, நட்டா என தம்பிதுரையின் அடுத்தடுத்த சந்திப்புகள் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரியா
பல்பீர் சிங்கிற்கு கண்டனம்: நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள்!