தமிழ்நாட்டில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் தான் இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இன்று (மார்ச் 30) செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுப் பேசினார்.
தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆரம்பத்திலிருந்து அதிமுக – பாஜக கூட்டணியில் இருக்கிறது என்று சொல்லி வருகிறோம். நடந்து முடிந்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு பாஜக ஆதரவளித்தது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும்” என்று கூறினார்.
முன்னதாக டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற ‘நியூஸ் 18 ரைசிங் இந்தியா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இதுகுறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் தான் இருக்கின்றன என பதிலளித்துள்ளார்,
பிரியா
தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வேண்டாம் : மத்திய அரசு!
விராட் – ஷாருக் ரசிகர்கள் இணையத்தில் மோதல்!
சோலி முடிந்தது