அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோரை அதிமுகவிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என கூறி இம்மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இதையடுத்து ஓபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி அமர்வு முன் இன்று (டிசம்பர் 8) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓபிஎஸ் தரப்பில், நான் மூன்று முறை முன்னாள் முதல்வராக இருந்திருக்கிறேன். அடிப்படை உறுப்பினர்களால் அதிமுக ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
நான் பங்குபெறாத பொதுக்குழு கூட்டத்தில் தன்னை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், “நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கட்சியின் சின்னம் கொடி ஆகியவற்றைப் பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும்.
இது எனது அரசியல் எதிர்காலம் சார்ந்த விஷயம்” என்றும் ஓபிஎஸ் சார்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க வேண்டும். தற்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை ஜனவரி 16ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அன்று நக்சல்… இன்று அமைச்சர்: தெலங்கானாவை கலக்கும் சீதாக்கா- யார் இந்த தன்சாரி அனுசுயா?
மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கான… யுபிஐ பண பரிவர்த்தனை வரம்பு ரூபாய் 5 லட்சமாக உயர்வு!
மஹூவா மொய்த்ரா எம்.பி பதவியில் இருந்து நீக்கம்!