பாஜகவிற்கு மணிப்பூர் குறித்து கவலையில்லை என்று காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்
மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற உள்ளது. இந்த விவாதத்தின் போது ராகுல் காந்தி பேச உள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் சார்பில் மதியம் 12 மணிக்கு ராகுல் காந்தி பேசுகிறார். பாஜகவுக்கு இந்தியா பற்றியோ சமூகம் குறித்தோ மணிப்பூர் குறித்தோ கவலை இல்லை.
ராகுல் காந்தியையும் அவரது குடும்பத்தையும் துஷ்பிரயோகம் செய்வது மட்டும் தான் அவர்களது வேலை. வேறு எதுவும் அவர்களுக்கு தெரியாது. பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும் ஏன் ராகுல் காந்தியை பார்த்து பயப்படுகிறன்றனர்” என்று தெரிவித்தார்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.
இதன் காரணமாக ராகுல் காந்தியின் எம்.பி பதவி திரும்ப பெறப்பட்டது. இந்தநிலையில் ராகுல் காந்தி மக்களவையில் மீண்டும் பேச உள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
அடியே டிரைலர்: ஜிவி பிரகாஷின் அரசியல் பகடி!