கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற மிக முக்கிய பங்காற்றியது ஆதவ் அர்ஜூனா தான் என அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் வெளியான வீடியோவில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில் இன்று (டிசம்பர் 6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட, ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பெற்றுக்கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் புத்தகத்தை வெளியிடும் விகடன் பிரசுரம், நூலை வடிவமைத்த வாய்ஸ் ஆஃப் காமென் நிறுவனரும், விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா குறித்த சிறப்பு வீடியோ விழா மேடையின் அகன்ற திரையில் காட்சியிடப்பட்டது.
அதில் ஆதவ் அர்ஜூனாவின் நிறுவனம் மற்றும் அரசியல் பயணம் குறித்து விவரிக்கப்பட்டிருந்தது.
மேலும் அரங்கில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு விஷயமும் வீடியோவில் தெரிவிக்கப்பட்டது.
அதில், “2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற மிக முக்கிய பங்காற்றியது ஆதவ் அர்ஜூனா என்றும், திமுகவிற்கு தேர்தலில் வேலைசெய்ய பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததே ஆதவ் அர்ஜூனா தான்’ என்றும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, ஃபெஞ்சல் புயல் விவகாரத்தில் திமுக அரசின் மீதான அதிருப்தி தொடர்ந்து திமுக அரசிற்கு எதிராக அவர் கருத்து தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது ஆதவ் அர்ஜூனா தான் என்று வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அம்பேத்கருடன் செல்பி… அரங்கம் அதிர எண்ட்ரி கொடுத்த விஜய்
நள்ளிரவில் அமைச்சர் சிவசங்கருக்கு வந்த போன்… அடுத்து நடந்தது என்ன?
வரலாற்றை சுட்டிக் காட்டிய பிசிசிஐ : ஐசிசி கூட்டத்தில் வாலை சுருட்டிய பாகிஸ்தான்