டிஜிட்டல் திண்ணை:  ஆதவ் மூட்டிய பொறி…  திருமா வைத்த தீ… திமுக கூட்டணியில் மீண்டும் அனல்!

Published On:

| By Aara

வைஃபை  ஆன் செய்ததும் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில்  விசிக தலைவர் திருமாவளவன் பேசிய ஒரு நிகழ்வின் வீடியோ இன்பாக்ஸில் இருந்து விழுந்தது.

அதை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. Adhav arjun thiruma dmk alliance issue

“விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளின் படத்திறப்பு நிகழ்வில் இன்று (பிப்ரவரி 2) திருமாவளவன் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வில் அவர் பேசிய பேச்சு, திமுக கூட்டணியில் இருந்தாலும் தீராத தொல்லைகள் ஆட்சி அதிகாரத்திற்கான காலம் கனிந்து விட்டது மீண்டும் பொங்கிய திருமா’ என்ற தலைப்பில் இன்றைய மின்னம்பலத்தில் விரிவான செய்தியாக வெளிவந்திருக்கிறது.

ஜனவரி 31ஆம் தேதி ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சியில் இணைந்து புதிய பதவி பெற்ற பிறகு  தனது அரசியல் ஆசான் என்ற  அடிப்படையில் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது இந்த சந்திப்பில் அரசியல் கணக்கோ அரசியல் முடிச்சோ இல்லை என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று பிப்ரவரி 2ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட கட்சி நிகழ்வில் பேசிய திருமாவளவன்…  திமுக அரசின் மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்துள்ளார்.

’திமுக கூட்டணியில் நாம் இருந்தாலும் காவல்துறையினரும் வருவாய்த் துறையினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை வளரவிடாமல் செய்வதில் சாதிய உணர்வோடு தொடர்ந்து செயல்படுகிறார்கள். இது வேதனைக்குரியது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு விரைவில் எடுத்துச் செல்வேன் என்று கூறிய திருமா…

திருமாவின் பானைக் கணக்கு!

‘இந்தியாவில் இருக்கும் எந்த மாநிலத்திலும் அம்பேத்கரை பின்பற்றுகிற இயக்கம் மாநில கட்சியாக சமீப காலங்களில் வர முடியவில்லை. அதை முறியடித்து தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தை கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. நாம் பெற்ற பானை சின்னத்தை தக்க வைக்க வேண்டும்.

அதற்கு அடுத்தடுத்த தேர்தல்களில் போதிய வாக்குகளை பெற்றால் தான் பானை சின்னத்தை தக்க வைக்க முடியும். இதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்றும் கூறியிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்ற போது… சில புள்ளி விவரங்களை அவரிடம் அளித்தார் என்கிறார்கள் ஆதவ் வட்டாரங்களில். Adhav arjun thiruma dmk alliance issue

அதாவது 2026 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  8 சதவீதம் அல்லது அதற்கு மேல் வாக்குகளை பெற வேண்டும் என்றால்… கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நின்ற 6 தொகுதிகளை விட அதிகமாக அதுவும் குறிப்பாக இரட்டை இலக்கத்தில் நின்றால் தான் முடியும். இப்படி ஒரு சூழ்நிலையில் திமுக கூட்டணியில் அவ்வளவு இடங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியை திருமாவிடம் ஆதவ் உரிமையாக கேட்டிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

உற்று நோக்கும் உதயநிதி

இந்த நிலையில் தான் ஓரிரு மாதங்களுக்கு முன்பு, ‘2026 தேர்தல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை செயல்படுத்துவதற்கான தேர்தல் அல்ல’ என்று கூறிய திருமாவளவன்… இன்று பிப்ரவரி 2 ஆம் தேதி, ‘பானை சின்னத்தை தக்கவைக்க நாம் கூடுதல் வாக்குகள் வாங்க வேண்டும். கோட்டையில் நம் கொடி பறக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை’ என்று பேசி இருக்கிறார்.

ஆதவ் விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட்டு வெளியே சென்றாலும்… அவர் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விசிகவை வெளியே கொண்டு வரும் முயற்சியை செய்து கொண்டிருக்கிறார். ஆதவ் சந்தித்த ஓரிரு நாட்களில் திருமாவளவனின் இந்த எதார்த்தமான பேச்சு திமுக கூட்டணியில் வேறு மாதிரியான விவாதங்களை எழுப்பி உள்ளது என்கிறார்கள். Adhav arjun thiruma dmk alliance issue

இதற்கிடையில் திமுக ஆட்சியை மன்னர் ஆட்சி என்ற விமர்சித்த ஆதவ்  அர்ஜூனாவை சந்தித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி அவரை பாராட்டியும் பேசிய திருமாவளவனின் அணுகுமுறையை முதல்வர் ஸ்டாலின் துளியும் ரசிக்கவில்லை. அதேபோல  துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலினும்  இதை கடுமையாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் திமுக இளைஞரணி தரப்பில்.

ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து வெளியேறிய பிறகும்  அவருக்கு திருமா தரும் முக்கியத்துவம், அதைத் தொடர்ந்த அவரின் உரை  ஆகியவை   திமுக கூட்டணிக்குள்  சலசலப்புகளை  மீண்டும் ஏற்படுத்தி விட்டன ” என்ற  மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது  வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel