அதிமுக வழக்கு தீர்ப்பு: தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு!

அரசியல்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று காலை (செப்டம்பர் 2) தீர்ப்பு வழங்கப்பட இருப்பதால், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி, நடைபெற்றது. அந்தச் சமயத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்,

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் உண்டானது.

அதிமுக அலுவலகத்தில் இருந்த பொருட்களும் சூறையாடப்பட்டன. இதையடுத்து, அதிமுக அலுவலகத்துக்கு சீல்வைக்கப்பட்டது.

இருதரப்பு மோதல் காரணமாக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு காவல்துறை கூடுதல் பாதுகாப்பு போட்டது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டது. இந்தநிலையில், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கி தீர்ப்பளித்தது சென்னை நீதிமன்றம்.

அத்துடன் ஒரு மாதத்திற்கு ’அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தலைமை அலுவலகத்திற்கு செல்லக் கூடாது’ என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கெடு ஆகஸ்ட் 20ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் வருவார்கள் என்பதால், மீண்டும் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கலவரம் காரணமாக, சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில்,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் மாறிமாறி புகார்கள் கொடுக்கப்பட்டன.

அப்புகார்கள் வழக்குகளாக மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த வேலையில்தான், இந்த ஒட்டுமொத்த வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, இந்த வழக்கில் புதிய விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் முதலில் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். பின் ஆதாரங்களின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று காலை (செப்டம்பர் 2) தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

இதையடுத்து, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்றும் தமிழக காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை உதவி ஆணையர் தலைமையில் 80 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

அதிமுக தலைமைக் கழக வழக்கு: புதிய விசாரணை அதிகாரிகள் நியமனம்!

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *