நெசவாளர்களுக்குக் கூடுதல் இலவச மின்சாரம் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கோவையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பிலான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றபோது,
“தற்போது குறுந்தொழிலாக உள்ள விசைத்தறி தொழிலுக்கு, தமிழக அரசு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.
பண மதிப்பிழப்பு, அகமதாபாத் டையிங் பிரச்சினை, ஜிஎஸ்டி, கொரோனா ஊரடங்கு, கூலி பிரச்சினை மற்றும் நூல் விலை உயர்வு என கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.
நாங்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பல கட்ட போராட்டத்துக்குப் பின், கூலி உயர்வு கிடைத்தது. தற்போது போராடி பெற்ற கூலிக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் ஜவுளி தொழில் காணாமல் போகும் அபாயம் ஏற்படும்” என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் ஜவுளி தொடர்பான வர்த்தக மாநாடு மற்றும் கண்காட்சி நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. இதை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், கைத்தறி துறையில் புதுமையான தொழில்நுட்பங்களை மேம்படுத்த ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகவும்
நெசவாளர்கள், விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தின் அளவை அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
-ராஜ்
சேடப்பட்டி முத்தையா உடலுக்கு அஞ்சலி: மதுரை செல்லும் முதல்வர்
தமிழகத்தில் பொது விநியோக முறை சிறப்பாகச் செயல்படுகிறது: ஜெயரஞ்சன்