முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் 3 பேருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீ்டு செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் தனி செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோர் உள்ளனர்.
முதலமைச்சரின் தனி செயலாளராக உள்ள உதயசந்திரனுக்கு, சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
உமாநாத் ஐ.ஏ.எஸ்க்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு-குறு நடுத்தர தொழில், ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சண்முகம் ஐ.ஏ.எஸ்க்கு, கால்நடை மற்றும் மீன்வளத்துறை, கைத்தறி, காதி, சமூக சீர்த்திருத்தம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதலமைச்சரின் சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை திட்டமிடுதல் ஆகியவை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் 4 ஆம் தனி செயலாளராக இருந்த அனு ஜார்ஜ்க்கு வழங்கப்பட்டிருந்த 12 துறைகள், தற்போது 3 தனி செயலாளர்களுக்கு பிரித்து வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
போலி செய்திக்கு தடை: மத்திய அரசு அதிரடி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரசில் சீட் யாருக்கு?