காங்கிரஸுக்கு மட்டும் இன்னும் 20 இடங்கள் கிடைத்திருந்தால் அவர்கள் எல்லோரும் ஜெயிலில் இருந்திருப்பார்கள் என்று பாஜகவை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 11) அம்மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார்.
அப்போது அவர், “பாஜகவினர் 400 சீட், 400 சீட் என கத்திக்கொண்டிருந்தனர். அவர்களது 400 சீட் எங்கே போனது. 240 இடங்களோடு அவர்களை மக்கள் நிறுத்திவிட்டனர். நமக்கு மட்டும் கூடுதலாக 20 இடங்கள் கிடைத்திருந்தால் அவர்கள் எல்லோரும் இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பார்கள். அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் தான்.
உங்கள் தலைவர் வலிமையானவராகவும், அச்சமின்றியும் இருக்கிறார். நீங்களும் பயமில்லாமல் இருங்கள். ஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்க தலைவர்கள் உதவ உள்ளனர். நாம் வெற்றி பெற வேண்டும், ஒன்றாகப் போராட வேண்டும், ஆனால் ஒருவரையொருவர் குற்றம் சொல்லக் கூடாது.
ஜம்மு காஷ்மீரில் உள்கட்டமைப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு 1 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த பணியிடங்களை நிரப்புவோம். இளைஞர்களுக்கு அந்த வேலைகள் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும்.
சுற்றுலா, உற்பத்தி மற்றும் பயிற்சித் துறைகளை மேம்படுத்துவோம்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நிலச்சரிவு பெற்றோர், தங்கையை பறித்தது… சாலை விபத்தில் வருங்கால கணவரும் உயிருக்கு போராட்டம்!
ஒரே விமானத்தில் எடப்பாடி- கமிஷனர் அருண்…. முதல்வருக்கு சென்ற ரிப்போர்ட்!