அதானி தமிழ்நாட்டுக்கு வந்து யாரை சந்தித்தார் என்பது தொடர்பான கேள்விக்கு டென்ஷனாகி பதிலளித்தார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை கண்ணகி நகரில் மாண்டிசோரி மழலையர் வகுப்புகளை பார்வையிட்டு முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 25) ஆய்வு செய்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு 3.08 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் சேவை மையத்தையும் திறந்துவைத்தார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம், டெல்டா பகுதிகளுக்கு அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “மழை வருதோ இல்லையோ, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன, உரிய பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, “ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து என்ன பேச வேண்டும் என்று தீர்மானமே போட்டிருக்கிறோம். அதை வலியுறுத்தி பேச வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறேன்” என கூறினார்.
தொடர்ந்து அதானி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“அதானி தமிழ்நாட்டில் வந்து சந்தித்ததாக சொல்கிறார்கள்” என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே அங்கிருந்து கிளம்பிய ஸ்டாலின் மீண்டும் வந்து, “துறையின் அமைச்சரே சொல்லியிருக்கிறார். நீங்கள் ட்விஸ்ட் செய்யாதீர்கள்” என்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அதானி தமிழ்நாட்டில் யாரை வந்து சந்தித்தார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறாரே,
“அவருக்கு வேறு வேலையில்லை. அவர் தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஓகே…” என்று கோபமாக பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த உதவி… காப்பாற்றியவர்களுக்கு ரிஷப் பண்ட் செய்த காரியம்!
அதானி விவகாரம் : கூடியதும் மக்களவை ஒத்திவைப்பு!