நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களை மத்திய ரிசர்வ் படையினர் தடுத்து நிறுத்தினர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 13-ஆம் தேதி துவங்கியது. கூட்டத்தொடர் துவங்கியது முதல் ராகுல் காந்தி லண்டனில் ஜனநாயகம் குறித்து பேசியது, அதானி விவகாரம் முக்கிய விவாதமாக உள்ளது.
ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது.
இன்று காலை 11 மணிக்கு அவை துவங்கியதும் அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அதானி குறித்து அமலாக்கத்துறையில் புகார் அளிப்பதற்காக நாடாளுமன்ற வளாகத்திலிருந்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், பாரத் ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அமலாக்கத்துறை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். அவர்களை டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் படையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
செல்வம்
ஹேப்பி நியூஸ் மக்களே…குறைந்தது தங்கம் விலை!
சிறப்பு திட்ட செயலாக்கம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!