அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் இன்று (பிப்ரவரி 7) நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது கடந்த ஜனவரி 31-ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் துவங்கியது.
இந்தநிலையில், ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகள் குறித்து வெளியிட்ட அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி நிறுவனத்திற்கு எதிராக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை துவங்கியவுடன் துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி, பாரதிய ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் மதியம் 12 மணி வரை இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கௌரி
விக்டோரியா நீதிபதி வழக்கு: தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!