பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் அக்கா என்று அழைத்தால் ஜாக்கிரதையாக இருங்கள் என நடிகை சர்மிளா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக ஓபிசி பிரிவு செயலாளர் திருச்சி சூர்யா மற்றும் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரண் இடையேயான ஆபாச தொலைபேசி உரையாடல் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனால், திருச்சி சூர்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்தது.

இதற்கு ஆதரவாக பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து நீக்கினார். திருச்சி சூர்யா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்தார். ஆபாச உரையாடல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
ஆபாச தொலைபேசி உரையாடல் குறித்து நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சூர்யா மற்றும் டெய்சி இடையே விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இருவரும் “அக்கா, தம்பி போன்று இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து டெய்சி சரணை ஆபாசமாக பேசிய திருச்சி சூர்யாவை கட்சியிலிருந்து ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கையைத் தாம் ஏற்பதாக திருச்சி சூர்யா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில், நடிகை சர்மிளா தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்களே உஷார்… பாஜககாரன் இனிமேல் அக்கான்னு சொன்னா ஜாக்கிரதையா இருங்க… சகோதரி, சகோதரினு ஒருத்தன் பிரஸ் மீட் கொடுப்பானே” என்று பதிவிட்டுள்ளார்.
சர்மிளாவின் ட்வீட்டிற்கு “அக்கா” என்று திருச்சி சூர்யா பதிலளித்துள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செல்வம்