அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை, அவர் மீது பாலியல் புகார் அளித்த நடிகை சாந்தினி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன்.
இவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் திரைப்பட துணை நடிகை சாந்தினி புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மணிகண்டனுக்கு எதிராக அளித்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டதாக நடிகை சார்பில் தெரிவித்ததையடுத்து, மணிகண்டனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தசூழலில் இன்று (அக்டோபர் 14) நடிகை சாந்தினி ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் உள்ள மணிகண்டனின் வீட்டை முற்றுகையிட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதிக்கு வந்த போலீசார் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரியா
கல்லூரி மாணவி கொலை: தந்தை மரணத்தில் திருப்பம்!
மூடுவிழா கண்ட கார்ட்டூன் நெட்வொர்க்: ஆழந்த வருத்தத்தில் 90s கிட்ஸ்!