நானும் சூர்யாவும் அக்கா தம்பி மாதிரி என்று கூறியதற்கு நடிகை கஸ்தூரி எதிர்வினையாற்றியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த டெய்சிக்கும் சூர்யா சிவாவுக்கும் இடையிலான உரையாடல் குறித்த ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
டெய்சிக்கு நடிகைகள் காயத்ரி ரகுராம், கஸ்தூரி உள்ளிட்டோர் ஆதரவாக பேசினர். இந்நிலையில் காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “அறுத்து மெரினாவில் எறிஞ்சுருவோம்; நட்டா, மோடி அண்ணாமலை யார் கிட்டே வேணா போ; *** பதவி வாங்கின உனக்கே திமிருன்னா… என் ஜாதிக்கு எனக்கு எவ்வளவு இருக்கணும்; பேசுபவனை விட்டுட்டு பெண்களை தண்டிப்பதுதான் உங்கள் அரசியலென்றென்றால்… அதை விட மானம்கெட்ட பிழைப்பு உலகில் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், டெய்சியும், சூர்யாவும் நாங்கள் அக்கா தம்பி என்று கூறியுள்ள நிலையில், அதற்கு கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“என்னது தம்பியா ?! அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு அரை பைசாவுக்கு விளக்க அறிக்கை கூட விடலை. அப்போ பேசுனதெல்லாம் கரெக்ட்டுதான் போல.
டெய்சிக்காக பெண்ணியம் கண்ணியம்ன்னு பொங்கின என்னை நானே.. செருப்பால அடிக்கசிக்கணும்” என செருப்பு இமோஜியை பதிவிட்டுள்ளார்.
மேலும், இனி பாஜக ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் !” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
“ஆடியோவை மறந்துடுங்க… நாங்க அக்கா – தம்பி” : டெய்சி – சூர்யா
Comments are closed.