பெண்ணிடம் தவறாக பேசியவரை விட்டுவிட்டு, பெண்களை நீக்குவதுதான் உங்கள் அரசியல் என்றால் இதைவிட மானம்கெட்ட பிழைப்பு உலகில் வேறெங்கும் இல்லை என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தமிழக பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக உள்ளார்.
சூர்யா சிவாவுக்கும் பாஜகவை சேர்ந்த சிறுபான்மை அணி தலைவர் டெய்சிக்கும் இடையே கட்சியில் பொறுப்புகளை வழங்குவது தொடர்பாக கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக டெய்சியிடம் செல்போனில் பேசிய சூர்யா சிவா, அவர் மீது அவதூறு பரப்பும் வகையிலும், ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் விதமாகவும் பேசி உள்ளார்.
இந்த ஆடியோவை வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து சூர்யா சிவாவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். “பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு.” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (நவம்பர் 22) அடுத்தடுத்து இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார்.அதில் ”தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்” என்றும்,
அதேபோல் சூர்யா சிவா விவகாரத்தில், “டெய்சி சரண், சூர்யா சிவா அவர்கள் இருவரின் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் சம்பவத்தை விசாரித்து கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை சூர்யா சிவா அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, அந்த ஆடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, “அறுத்து மெரினா வில் எறிஞ்சுருவோம்; நட்டா, மோடி அண்ணாமலை யார் கிட்டே வேணா போ; *** பதவி வாங்கின உனக்கே திமிருன்னா… என் ஜாதிக்கு எனக்கு எவ்வளவு இருக்கணும்; பேசுபவனை விட்டுட்டு பெண்களை தண்டிப்பதுதான் உங்கள் அரசியலென்றென்றால்… அதை விட மானம்கெட்ட பிழைப்பு உலகில் இல்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திமுகவின் இளைஞர் அணி செயலாளர்: உதயநிதி மீண்டும் நியமனம்!
எழுத்தாளர்களுக்கு வீடு: தமிழக அரசுக்கு ரவிக்குமார் அட்வைஸ்!