சம்மன் வழங்க எழும்பூர் போலீசார் இன்று (நவம்பர் 10) சென்றபோது நடிகை கஸ்தூரி வீட்டில் இல்லாததால் அவர் தலைமறைவாகி விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் மக்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது.
அவரது பேச்சுக்கு திமுக, பாஜக என பல தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்த நிலையில் தெலுங்கர்கள் குறித்த தனது பேச்சுக்கு கஸ்தூரி மன்னிப்பு கேட்டார்.
இதற்கிடையில், கஸ்தூரிக்கு எதிராக சென்னை, திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல பகுதிகளில் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
சென்னை எழும்பூர் காவல் நிலைத்தில் கஸ்தூரி மீது இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்து நடிகை கஸ்தூரி தப்பி ஓடி தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தற்போது தலைமறைவாகியுள்ளதால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நெல்லை கணேசன் ’டெல்லி கணேஷ்’ ஆக மாறியது எப்படி?
ஆளுநரை சந்திக்க தயாராகும் விஜய்
ஆமகறியான் இதை விட மகா கேவலமாக அறுவருப்பாக அசிங்கமாக மட்டரகமாக பேசும் போதெல்லாம் அமைதியாக இருந்தவர்கள் கஸ்தூரி பின்னால் மட்டும் வரிந்து கட்டி ஓடுவதேன்..வெறும் வழக்கு பதிவு சம்மனுக்காக மட்டுமா??!😏😏😏😏