நடிகை காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்து வந்த காயத்ரி ரகுராம், கடந்த ஜனவரி 19ஆம் தேதி அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் அதிமுகவில் காயத்ரி ராகுராமுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 2) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து வந்த காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகினார். அதுபோன்று பாஜகவில் இருந்து விலகி நடிகை கவுதமியும் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024: ‘செண்டிமெண்டாக’ புதிய கேப்டனுடன் களமிறங்கும் அணி!
அர்த்தம் மாறும் அமலாக்கம்: அப்டேட் குமாரு