Actress Gautami quits BJP

பாஜகவில் இருந்து திடீர் விலகல்… நடிகை கவுதமி குமுறல்!

அரசியல்

தனது மொத்த சொத்துகளையும் ஏமாற்றி அபகரித்த பாஜக பிரமுகருக்கே அனைவரும் ஆதரவாக இருப்பதால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகவும் கனத்த இதயத்துடனும், ஆழ்ந்த ஏமாற்றத்துடனும் நான் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் பங்களிப்பதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் கட்சியில் சேர்ந்தேன். என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட அனைத்து சவால்களிலும் கூட, நான் அந்த உறுதிப்பாட்டை மதிக்கிறேன்.

எனினும், இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன். கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை என்பது மட்டுமல்லாமல், அவர்களில் பலர் அந்த நபரை தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

நம்பிக்கைக்கு துரோகம் செய்து எனது வாழ்நாள் சம்பாத்தியத்தை அவர் ஏமாற்றிவிட்டார்.

Actress Gautami quits BJP

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

நான் 17 வயதிலிருந்தே சினிமா, தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் மீடியா என 37 வருடங்களாக திரைத்துறையில் உழைத்து வருகிறேன்.

இப்போது நானும் எனது மகளும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். ஆனால் பாஜகவை சேர்ந்த சி.அழகப்பன் என்பவர் எனது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை கொண்டு பெரிய அளவில் மோசடி செய்திருப்பது என்னை திகிலடையச் செய்துள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, என் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் தனிமையைக் கண்டு அழகப்பன் என்னை அணுகினார். ஏனெனில் நான் அப்போது என் பெற்றோர் இருவரையும் இழந்த ஒரு அனாதை மட்டுமல்ல, கைக்குழந்தையுடன் ஒரு தாயாகவும் இருந்தேன்.

அக்கறையுள்ள முதியவர் என்ற போர்வையில் அவர் தனது குடும்பத்துடன் என் வாழ்க்கையில் நுழைந்தார். இந்தச் சூழ்நிலையில்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு எனது பல நிலங்களின் பத்திர ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன். ஆனால் சமீபத்தில்தான் அழகப்பன் அதை வைத்து மோசடி செய்ததைக் கண்டுபிடித்தேன்.

என்னையும் என் மகளையும் அவரது குடும்பத்தில் ஒரு அங்கமாக வரவேற்பது போல் பாசாங்கு செய்துள்ளார் இப்போது உணர்கிறேன்.

நான் உழைத்து சம்பாதித்த பணம், சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை மீட்டெடுப்பதற்காக, ஒவ்வொரு இந்திய குடிமகனும் செய்ய வேண்டிய சட்டங்கள், விதிகள் மற்றும் செயல்முறைகளை நான் பின்பற்றுகிறேன்.

எனக்கு நீதி கிடைக்கும் என்ற முழு மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் தமிழக முதல்வர் மீதும், காவல் துறை மீதும், நீதித்துறை மீதும் முழு நம்பிக்கை வைத்து அழகப்பன் மீது புகார்களை அளித்துள்ளேன். ஆனால் அந்த செயல்முறை விவரிக்க முடியாத அளவுக்கு இழுத்தடித்து வருவதைக் காண்கிறேன்.

Actress Gautami quits BJP

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, தலைமை கேட்டுக்கொண்டபடி, ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சிக்காக பா.ஜ.க. சார்பில் போட்டியிட உறுதியளித்தேன். ராஜபாளையம் மக்களுக்காகவும், அடிமட்ட அளவில் பாஜகவை வலுப்படுத்துவதற்காகவும் என்னை அர்ப்பணித்தேன். எனினும், கடைசி நிமிடத்தில் எனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டது.

அதனையும் பொருட்படுத்தாமல், கட்சி மீதான எனது உறுதிப்பாட்டைக் காப்பாற்றினேன்.

கடந்த 25 வருடங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்தும், தற்போது வரை முழுமையான ஆதரவு இல்லை. மேலும் பாஜகவின் பல மூத்த உறுப்பினர்கள் கடந்த 40 நாட்களாக நீதியை ஏமாற்றி, தலைமறைவாகி உள்ள அழகப்பனுக்கு ஆதரவாக உள்ளதை நினைக்கும் போது மனம் உடைந்துவிட்டது.

தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர், காவல் துறை மற்றும் நீதித்துறை நான் தேடும் நீதியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் உள்ளது.

நான் இன்று இந்த ராஜினாமா கடிதத்தை மிகுந்த வேதனையிலும் வருத்தத்திலும் எழுதுகிறேன். அதேவேளையில் இதில் உறுதியாகவும் உள்ளேன்.

எனக்கும் என் குழந்தையின் எதிர்காலத்திற்கும் ஒரு தனிப் பெண்ணாக நீதி கேட்டு போராடுகிறேன். ஜெய் ஹிந்த்!” என்று கௌதமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

அடுத்தடுத்து பாஜகவினர் கைது…. தமிழகத்திற்கு 4 பேர் குழுவை அனுப்பிய தலைமை!

திருப்பதி ரயில் நிலைய கட்டடம் இடிப்பு!

 

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *