அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கௌதமியை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 21) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கௌதமி இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக தடா பெரியசாமி நியமிக்கப்படுகிறார். அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணை செயலாளராக ஃபாத்திமா அலி நியமிக்கப்படுகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து P. சன்னியாசி விடுவிக்கப்பட்டு, மாநில விவசாய பிரிவு துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய நடிகை கெளதமி மற்றும் தடா பெரியசாமிக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெல்லை: நீட் கோச்சிங் சென்டரில் மாணவர்கள் மீது தாக்குதல்… விடுதி மூடல்!
16 செல்வங்கள்… 16 குழந்தைகள் : நாடாளுமன்ற தொகுதிகள் குறைவதை சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின்