தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த மாநாடு வெற்றி பெற அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு சினிமா மற்றும் அரசியல் கட்சி பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
எனது நீண்டகால நண்பரான விஜய்க்கு வாழ்த்துக்கள். யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம், மக்கள் பணியில் எப்படி ஈடுபடப்போகிறோம் என்பது தான் முக்கியம்.
நடிகர் சிவகார்த்திகேயன்
இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நடிகர் விஜய் சேதுபதி
தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க,. தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகள்.
நடிகர் பிரபு
அரசியலில் முதல் படி எடுத்து வைத்திருக்கும் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் அரசியலில் நல்ல நிலைக்கு வர வேண்டும்.
நடிகர் சசிகுமார்
உங்கள் வரவு, எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கையாக அமையட்டும். நல் வாழ்த்துகள்…விஜய் சார்
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
தவெக மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் விஜய் அண்ணா
இயக்குனர் வெங்கட் பிரபு
இன்றைய மாநாட்டின் மூலம் புதிய அரசியல் பயணத்தை தொடங்கும் விஜய் அண்ணனுக்கு வாழ்த்துக்கள். உங்களது அரசியல் பயணத்தின் மூலம் பலரது வாழ்விலும் மாற்றம் வர வேண்டும்.
நடிகர் சதிஷ்
திரைத்துறையைப் போல் இதிலும் வெற்றிக் கொடி நாட்ட வாழ்த்துக்கள்
நடிகர் ஜெயம் ரவி
சினிமாவில் நீங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்த புதிய பயணம் சிறப்பான வெற்றியடைய வாழ்த்துக்கள்
நடிகை ரெஜினா காசண்ட்ரா
விஜய் வெற்றிகரமான நடிகர். அவர் வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் வருவார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி
அன்புள்ள விஜய் சார், சினிமாவை விட்டு தேர்தல் அரசியலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு பெரிய முடிவு. உங்களின் மிகப்பெரிய பயணம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சைபர் மோசடி : எச்சரிக்கையாக இருக்க மோடி அறிவுறுத்தல்!
“ஒவ்வொரு டெஸ்டிலும் சென்ட்டம்”… உதயநிதியைப் பாராட்டிய ஸ்டாலின்