விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்: பிரேமலதாவால் நடிகர் சங்கத்தில் பிளவா?

அரசியல் சினிமா

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது உடலுக்கு விஜயகாந்துடன் திரையுலகில் பயணித்த நடிகர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சுகன்யா, குஷ்பு, நளினி, ராதாரவி, கவுண்டமணி என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர். எனினும் பல நடிகர்கள் வரவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்தநிலையில் வரும் ஜனவரி 19ஆம் தேதி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக நடிகரும், நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி தெரிவித்தார்.  இன்று (டிசம்பர் 4) விஜயகாந்த் நினைவிடத்தில் கார்த்தியும், அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமாரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி இந்தத் தகவலை தெரிவித்தார்.

விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்படுவது குறித்து தென்னிந்திய நடிகர் சங்க வட்டாரத்தில் விசாரித்தோம்.

“விஜயகாந்த் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்த போதே அவரை சந்திக்க பல நடிகர்களும் முயன்றனர். இதற்காக விஜயகாந்தின் மனைவியும்  தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதாவிடம் பேசினார்கள்.  பழைய நண்பர்கள் விஜயகாந்துடன் பேசினால் அவரது நினைவாற்றல் திரும்பி அதுவே அவருக்கு புத்துணர்ச்சியளிக்கும் என்று அவர்கள் விஜயகாந்தை சந்திக்க கோரிக்கை வைத்தார்கள்.

ஆனால் விஜயகாந்த் உடல் நலக் குறைவால் இருக்கிறார். இந்த நேரத்தில் பார்த்தால் தொற்று பாதிப்பு ஏற்படக் கூடும் என்று சொல்லி பல நடிகர்களை அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது அவர் வரவில்லை. இவர் வரவில்லை என்ற விமர்சனங்களை தேமுதிகவை சேர்ந்தவர்களே  சமூக தளங்களில் வைக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் கூட இருக்கிறது.  இந்த கூட்டத்துக்கு பிரேமலதாவை அழைக்க வேண்டாம்  என்று நடிகர் சங்கத்திலேயே சிலர் வலியுறுத்தி வருகிறார்கள். ஏனென்றால் அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறார்.  நடிகர் சங்க அஞ்சலி கூட்டத்திலும் அவர் அரசியல் பேசிவிடுவாரோ? அதனால் அவரை அழைக்கலாமா? வேண்டாமா?  என்ற கருத்துப் பரிமாற்றங்கள் நடந்து வருகிறது.

அதேநேரம், இந்த விவகாரத்தில் பிரேமலதாவை விஜயகாந்தின் மனைவியாக மட்டுமே பார்க்க வேண்டும். அவரை அழைக்காமல் எப்படி இரங்கல் கூட்டம் நடத்த முடியும்? என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்தான் நடிகர் சங்க தலைவர் விஷால் அமெரிக்காவில் இருக்கும் நிலையில், தேமுதிக அலுவலகத்தில் இருக்கும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த இன்று (ஜனவரி 4) நடிகர் சங்க பொருளாளரான கார்த்தியும் அவரது தந்தை சிவகுமாரும் சென்றனர்.

இன்றே சசிகுமார் சாலிகிராமத்தில் இருக்கும் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று  விஜயகாந்த் படத்துக்கு மரியாதை செய்து பிரேமலதாவை சந்தித்து பேசினார். ஆனால் சிவகுமாரும், கார்த்தியும் தேமுதிக அலுவலகம் சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பிரேமலதாவை அவர்கள் சந்திக்கவில்லை.

வேந்தன், பிரியா

விஜய் மீது காலணி வீச்சு: காவல் நிலையத்தில் புகார்!

கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை!

 

+1
0
+1
2
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *