actor vijay wishes thiruma

திருமாவுக்கு வாழ்த்து சொன்ன விஜய்: பின்னணி இது தான்!

அரசியல்

விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஆகஸ்ட் 17) தனது 61-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் திருமாவளனுக்கு நடிகர் விஜய் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாம் அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது, “கடந்த ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் 49-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நெருக்கமான பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அன்றைய தினம் விசிக தலைவர் திருமாவளவன் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். விஜய் தொடர்ந்து லியோ ஷூட்டிங்கில் இருப்பதால் உங்களுடைய வாழ்த்தை அவருக்கு தெரியப்படுத்துகிறோம் என்று விஜய் அலுவலகத்தினர் திருமாவளவனிடம் கூறியிருக்கின்றனர்.

அதன்பிறகு விஜய் அடுத்தடுத்து வெளிநாட்டிற்கு ஷூட்டிங் சென்றார். இந்தநிலையில் தான் திருமாவளவன் இன்று 61-ஆது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் அவருக்கு விஜய் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வரக்கூடிய சூழலில் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவிக்கிறார்கள்.

செல்வம்

ராமநாதபுரத்தில் மோடியா? குதிரை வண்டிக் காரர் வரலாற்றை நினைவுபடுத்திய கனிமொழி 

மீனவர்கள் குடும்பத்துடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
2
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *