நெல்லையில் நிவாரண உதவி : நேரில் வழங்கிய விஜய்

அரசியல் சினிமா

நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி மற்றும் பொருட்களை நடிகர் விஜய் இன்று (டிசம்பர் 30) நேரில் வழங்கினார்.

தென்மாவட்டங்களில் கடந்த வாரம் வெளுத்துவாங்கிய அதி கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி சாலைகள் துண்டிக்கப்பட்டன.

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நெல்லை, தூத்துக்குடியில் அரசு மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  1,500 பேருக்கு நிவாரண பொருட்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்க இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி பாளையங்கோட்டை அடுத்த கேடிசி நகர் அருகே உள்ள மாதா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்ட நடிகர் விஜய், மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார்.

மேடையில் ஏறாமல் சுமார் 1500 பேரையும் ஒவ்வொருவராக சந்தித்து ரூ.2000 மதிப்புள்ள காய்கறிகள், அரிசி, உடைகள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

நேற்று முன் தினம் (டிசம்பர் 28) இரவில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் விஜய். நேற்று அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நடிகர் விஜய் இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக நிவாரண உதவிகள் வழங்கப்படும் நெல்லை மாதா மஹாலுக்கு வந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

இதனைத்தொடர்ந்து நிவாரண உதவி பெறுவதற்காக வந்த அனைவருக்கும், மதிய உணவும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் : என்னென்ன வசதிகள் உள்ளன?

நெல்லையில் நிவாரண உதவி : விஜயகாந்த் மறைவால் தயங்கிய விஜய்

 

 

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *