விலையில்லா விருந்தகம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய ரசிகர்களை நடிகர் விஜய் இன்று (ஏப்ரல் 28) சென்னையில் சந்தித்துள்ளார்.
நடிகர் விஜய் அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுப்பது, அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்தவகையில் சமீபத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தனது மன்ற நிர்வாகிகள் அனைவரையும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த உத்தரவிட்டார். அதன்படி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தநிலையில் நடிகர் விஜய் இன்று விலையில்லா விருந்தகம் திட்டத்தை தமிழகம் முழுவதும் சிறப்பாக நடத்தி வரும் தனது 300 ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது தனது ரசிகர்களை மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்களை தொடர்ந்து செய்ய வேண்டியும், பண உதவிகள் தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்றும் விஜய் கூறியுள்ளார்.
இதுகுறித்து அகில இந்திய விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தளபதி மக்கள் இயக்கம் சார்பில் விலையில்லா விருந்தகம், விலையில்லா முட்டை, ரொட்டி வழங்கும் திட்டம், குருதியகம், விழியகம் என்று மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம்.
தளபதி ஓய்வாக இருக்கும் போது ரசிகர்களை சந்திப்பது வழக்கம். அதன்படி இன்றும் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
டிஜிட்டல் திண்ணை: தொடர் சர்ச்சைகள்…வடபழனி முருகனிடம் உருகிய பிடிஆர்