actor rajkiran condemns seeman

விளைவு மோசமாக இருக்கும்: ராஜ்கிரண் ஆவேச பதிவு!

அரசியல்

மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், சமூக அமைப்புகள் பல்வேறு போராட்ட வடிவங்களில் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.

அதன் வரிசையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய அக்கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான் , “இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றி கூறிய கருத்துகள் மற்றும் அதற்காக அவர் பயன்படுத்திய வார்த்தைகள் சர்ச்சையானது.

அதனை நேரடியாக கண்டிக்காமல் இஸ்லாமியர்களின் பொறுமையை பற்றி நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில்,

“இஸ்லாமியர்களுக்கு எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்துகொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல.

’இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம் என்ற கொள்கையினால்’.

பொறுமை காக்க வேண்டும் என்று இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று பொறுமை காக்கிறோம்.

இந்தப் பொறுமையை தவறாகப் புரிந்துகொண்டு கண்டவர்கள் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இராமானுஜம்

நாளை இந்தியா கூட்டணி : இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்த அமித்ஷா

இரண்டு ரவுடிகள் என்கவுன்டர்: டிஜிபி விளக்கம்!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

1 thought on “விளைவு மோசமாக இருக்கும்: ராஜ்கிரண் ஆவேச பதிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *