நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை ரோஜா. அதனைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாள திரையுலகிலும் வலம் வந்த அவர் சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவை தொடர்ந்து ஆந்திராவில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலிலும் களம் இறங்கிய ரோஜா, நகரி தொகுதியில் 2014-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவர் தற்போது ஆந்திராவின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் ரோஜா நேற்று (ஜூன் 9) இரவு திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கால் வலி மற்றும் கால் வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
WTCFinal: தோல்வி முகத்தில் இந்தியா… கோலியை கைகாட்டும் கங்குலி
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!