சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை நடிகர் பாக்யராஜ் இன்று (ஆகஸ்ட் 26) சந்தித்து பேசினார்.
விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடனும், ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஆகஸ்ட் 26 ) ஆலோசனை நடத்தினார்.
அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை பாக்யராஜ் சந்தித்தார்.

அதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பாக்யராஜ், முதலில் எம்ஜிஆர் இந்த கட்சியை தொடங்கினார்.
அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா சிறப்பாக வழிநடத்தினார். அதன் பிறகு பன்னீர் வந்தார். கடைசியாக எடப்பாடி பழனிசாமி வந்தார்.
திருஷ்டி படும் படி இடையில் சில பிரச்சினைகள் நடந்துவிட்டது. இனி பழையபடி அதிமுக நல்லபடியாக இருக்கும். அதனால் தான் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பன்னீர் கூறி வருகிறார்.
மீண்டும் எல்லோரும் ஒன்றுபட்டு எம்.ஜி.ஆர் எப்படி விட்டுவிட்டுப் போனாரோ அந்த அளவுக்கு இக்கட்சி பலம்பெறும்.
அதற்காக அதிமுகவில் முறையாக நானும் இணைந்து செயல்படுவேன். சிறிய தொண்டனாக கட்சிக்காக செயல்படுவேன்.
அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர வேண்டும், முடிந்தால் நானே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுவேன் என்றும் அதிமுகவில் அனைவரும் ஒன்று இணைவார்கள். ஆனால் சிறிது காலம் ஆகும்” என கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டிஜிட்டல் திண்ணை: அதிமுக அரசியலில் ரஜினி? வெளிவராத புதிய ரகசியங்கள்!