நாட்டில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 2) தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பல அரசியல் கட்சி தலைவர்கள் விசாரணைக்காக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் என முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு பின்னால் பாஜக இருப்பதாகவும், பாஜகவின் அரசியல் அழுத்தத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி “இந்தியா” கூட்டணியினர் டெல்லியில் உள்ள ராம்லீலா பகுதியில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, “
ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு தடுக்கவும் முயற்சி செய்கிறார்கள். ஒவ்வொரு ஊழல்வாதிக்கும் எதிராக பாஜக ஆட்சி காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊழலுக்கு எதிராக மூன்றாவது பதவிக்காலம் விரைவில் நடத்தப்படும். எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் கட்டாயம் நடைபெறும்.
கேளிக்கைகளிலும், கொண்டாட்டங்களிலும் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை. மக்களுக்கு பணியாற்றவே நான் பிறந்துள்ளேன்.ஏழைகள் அல்லது நடுத்தர மக்களின் உரிமைகளை யாரையும் திருட விடமாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், “காங்கிரஸிடம் தேசபக்தி இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஊழலுக்கு பெயர்போன ஆட்சி காங்கிரஸ் ஆட்சி.
அவர்கள் தற்போது சொல்கிறார்கள் ஊழலை ஒழிப்போம், ஊழல்வாதிகளை ஒழிப்போம் என்று. ஆனால், நான் யாருக்கும் பயப்படுவதில்லை” என குறிப்பிட்டார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Rain Update: இந்த இடங்களுக்கு இடியுடன் கூடிய மழை உண்டு!
”கச்சத்தீவு பற்றிய ஆர்.டி.ஐ பச்சைபொய்” – பழனிவேல் தியாகராஜன்