பால் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
குஜராத் அரசின் பொதுத்துறை நிறுவனமான அமுல் தமிழகத்தில் நுழைய முயற்சி செய்து வருகிறது.
அந்த வகையில் தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விளம்பரப் பணிகளையும் ஆரம்பித்துள்ளது.
மேலும் பால் உற்பத்தி விவசாயிகளிடம் இருந்து அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்ய, அமுல் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தற்சமயம் ஆவின் பால் சரிவர கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக வரும் நிலையில், அமுலின் வருகையானது தமிழகத்தில் பேசுபொருளானது.
இதுதொடர்பாக தமிழகத்தில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
“பால் உற்பத்தியாளர்களுக்கு அனைத்து காலங்களிலும் ஒரே சீரான விலையை வழங்குவது ஆவின் மட்டுமே என அமைச்சர் கூறியுள்ளார்.
வேறு எந்த நிறுவனங்களை விட மிகத் தரமாகவும், விலை குறைவாகவும் ஆவின் பால் விற்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளை சரி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள சீன விமானம்!