ஊக்கமருந்து பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை தேவை : பி.டி. உஷா எம்.பி!

மாநிலங்களவையில் நேற்று( ஆகஸ்ட் 3 ) தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

மாநிலங்களவையின் நியமன எம்.பி.யான தடகள வீராங்கனை பி.டி. உஷா தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டார். மாநிலங்களவை நியமன எம்.பி. யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு அவர் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது.

தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், “ கேரளாவின் குக்கிராமத்தில் இருந்து வந்த நான் தடகளத்தில் சாதனை படைத்தேன். விளையாட்டுத் துறையில் இந்தியா இன்று ஈடு இணையற்ற நாடாக இருக்கிறது. மாவட்டங்கள் தோறும் பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சி பெறும் மையங்கள் இருக்கின்றன. விளையாட்டு துறையில் இந்தியா தற்சார்பு அடைய இதுவே சரியான நேரம்.

ஊக்க மருந்து பயன்படுத்தும் வீரர்கள் தங்களது எதிர்காலத்தைப் பாழாக்குவது மட்டுமின்றி இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களையும் பாழாக்குகின்றனர். அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் கீழ் கொண்டு வரவேண்டும்.

மேலும் காயங்களிலிருந்து வீரர்கள் மீண்டு வர விளையாட்டு மருத்துவம் மற்றும் அறிவியல் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். துரதிர்ஷ்டமாக சில இந்திய வீரர்களே உலகளவில் சாதனை படைக்க முடிந்தது. ஸ்டெராய்டு சோதனையில் சிக்கிய மற்றும் ஊக்கமருந்துக்காகத் தண்டனை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெராய்டுகள் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் மருந்துப் பொருட்களைப் பயன்படுத்துவோருக்கு எதிராகத் தடை விதிக்கப்பட வேண்டும். அதேசமயம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் செயல்பாடுகளை முடுக்கி விடவேண்டும். தடையின்றி செயல்படச் சுதந்திரம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் பங்கேற்ற அயோத்தி ராமி ரெட்டி அல்லா (ஒய்.எஸ்.ஆர்.சி.பி.) ஊக்கமருந்து பயன்படுத்துவதைச் சரிபார்க்க நாட்டில் போதுமான சோதனை உள்கட்டமைப்பு தேவை என்றும், ஜான் பிரிட்டாஸ் சிபிஐ ( எம் ) மற்றும் சஞ்சய் சிங் ( ஆம் ஆத்மி ) விளையாட்டுக்கான பட்ஜெட் ஒதிக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சுரேஷ் ரெய்னாவுக்கு டாக்டர் பட்டம்: தமிழக பல்கலை அறிவிப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts