தங்க நகைகள் ஏலம் விடுவதற்கான விதிமுறைகளை மீறினால் வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். Action against banks
மக்களவைக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது இன்று (பிப்ரவரி 10) திமுக எம்.பி கனிமொழி, வங்கி-சாரா நிதிநிறுவனங்களில் நகைக்கடன் பெற்றுள்ள பொதுமக்களின் தங்கநகைகளை திடீர் அறிவிப்பின் பேரில் ஏலம்விடும் நடவடிக்கை அதிகரித்திருக்கிறது. மேலும், நகைக்கடன் அடிப்படையில் வழங்கப்படும் ரொக்கத்தொகையின் உச்சவரம்பு வெறும் 20,000 ரூபாயாக இருப்பதால், மக்கள் சிரமங்களை எதிர்க்கொள்கின்றனர்.
எனவே தங்க நகைகள் பெரியளவில் ஏலம் விடப்படுவதைத் தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா? ஏன் 20,000ரூபாய் என்றளவில் நகைக்கடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதலில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பலமுறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இதுதவிர அனைத்து நிறுவனங்களுக்கும் தங்கநகை கடன் போர்ட்ஃபோலியோக்களை கண்காணிக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது” என்று பதிலளித்தார்.
பலமுறை நோட்டீஸ் Action against banks
தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், “தங்கம் ஏலம் விடும் விதிமுறைகளை மீறினால் வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.
மேலும் அவர், “வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் சேவை சரியான அளவில் இல்லை என்று தெரிவிக்க போதுமான அளவுக்கு நோட்டீஸ் அனுப்பும் நடைமுறை உள்ளது. இருப்பினும் கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்த வரவில்லை என்றால் வங்கிகள் அல்லது வங்கி சாரா நிறுவனங்களால் தங்க நகைகளை ஏலம்விடுவதற்கான கட்டாயம் ஏற்படுகிறது.
ஆனால் ஏலம் விடும் நடைமுறைகளை மீறப்படும் நிகழ்வுகள் குறித்து தெரியவந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். Action against banks