aavin women killed

ஆவின் பெண் ஊழியர் பலி : எடப்பாடி கண்டனம்!

அரசியல்

ஆவின் தொழிற்சாலையில் இன்று(ஆகஸ்ட் 21) பணியின் போது கன்வேயர் பெல்டில் தலைமுடி சிக்கி உயிரிழந்த பெண் ஊழியரின் மரணத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த உமாராணி என்பவர் வழக்கம் போல காக்களூரில் இயங்கி வரும் ஆவின் தொழிற்சாலையில் இன்று வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, ‘கன்வேயர்’ பெல்டில் அவரது தலைமுடி மற்றும் துப்பட்டா சிக்கி, அவரது தலை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் “திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உமாராணி என்ற பெண் ஊழியர் கன்வேயர் பெல்டில் துணி, தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

உயிரிழந்த உமாராணி குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன். பால் பண்ணையில் பணி செய்யும் ஊழியர்கள் ஆபத்தான இயந்திரங்களுக்கு இடையில் பணிபுரியும் போது, அவர்களுக்கான பாதுகாப்பை ஆவின் நிர்வாகம் உறுதி செய்திருக்க வேண்டும்.

ஆனால் திமுக ஆட்சியில், பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை.

பாலில் ஒரு முடி கூட உதிரக் கூடாது என்பதே ஆவின் நிறுவனத்தின் பாதுகாப்பு நெறிமுறை. ஆனால் முறையான பாதுகாப்பு வசதிகளை திமுக அரசு ஏற்படுத்தித் தராததன் விளைவாகவே இன்றைக்கு ஒரு பெண் தொழிலாளி தன் தலைமுடி சிக்கி, தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உயிரிழந்த உமாராணி குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை வழங்குவதுடன், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ஆவின் பால் பண்ணைகளில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

காங்கிரஸ் கட்சியில் சேருகிறாரா வினேஷ் போகத்… வெளியாகும் ரகசியம்!

பூண்டு இருந்தால் போருக்கே போகலாம்… சந்தைக்கு வந்த போலி பூண்டு… ஜாக்கிரதை மக்களே!

ரூ.68,873 கோடி திட்டங்கள் தொடக்கம் : முதலீட்டாளர்களிடம் ஸ்டாலின் வேண்டுகோள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *