அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜனவரி 11) பிற்பகல் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று காலை திமுகவே அதில் போட்டியிடுவதாகவும் வேட்பாளார் சந்திரகுமார் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த பின்னணியில் அதிமுக அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார் ஆற்றல் அசோக் குமார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர். வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்ட படி இவரது சொத்து மதிப்பு 583 கோடி ரூபாய். இதனால் அப்போது பரபரப்பாக பேசப்பட்டார் ஆற்றல் அசோக் குமார்.
அப்படிப்பட்டவர் மாசெ.க்கள் கூட்டத்துக்கு முன்பே அதிமுக அலுவலகம் சென்று, ‘நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட நான் ஆர்வமாக இருக்கிறேன். திமுகவுக்கு இணையாக செலவு செய்ய முடியும். திமுக வேட்பாளர் சந்திரகுமார் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர், கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த நான் அதிமுக சார்பில் போட்ட்டியிட்டால் கடும் போட்டியை உருவாக்க முடியும்” என்று கூறி தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார் ஆற்றல் அசோக் குமார்.
மாசெக்கள் கூட்டத்தில் ஆற்றலின் கோரிக்கை பற்றியும் விவாதிக்கப்படும் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டெஸ்ட் போட்டி ஜெர்சியை இன்ஸ்டாவில் பதிவிட்ட ஜடேஜா… ஓய்வு முடிவா?