துணை முதல்வர் உதயநிதியின் துணை செயலாளராக ஆர்த்தி நியமனம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூ கால்நடை பராமரிப்பு, மீன்வளத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Image

சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநர் ஆர்த்தி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் துணை செயலாளராக, நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி மனித வள மேலாண்மைத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய ஊரக திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சுற்றுலாத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தேசிய சுகாதார திட்ட இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக நகர செயலாளர் + சேர்மேன் மீது பாய்ந்த எஸ்.சி / எஸ்.டி வழக்கு!

திறமைக்கு பொருளாதாரம் தடையாக இருக்க கூடாது… மாணவர்களுக்கு உதயநிதி குட் நியூஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share