மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி துவங்கியது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்று இரு அவைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இரண்டு நாட்களும் அவை நடவடிக்கைகள் முடங்கின.
இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி-க்கள் காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று போராட்டம் நடத்தினர்.
இன்று மூன்றாவது நாளாக அவை துவங்கியதும் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மாநிலங்களை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை சபாநாயகர் ஜெகதீப் தன்கர் இருக்கை அருகே ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் வந்து அமளியில் ஈடுபட்டார். இதனால் அவரை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம்
தேஜகூ கூட்டத்திற்கு அழைப்பு இல்லாதது ஏன்? – பிரேமலதா பதில்!
பாஜக vs காங்கிரஸ் : போட்டா போட்டி போராட்டம்!