டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி
கடந்த 15 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது.
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி 250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 50 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இன்று (டிசம்பர் 7) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. 126 வார்டுகளை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் காலை முதல் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில் டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
250 வார்டுகளில் 131 வார்டுகளை கைப்பற்றி ஆம் ஆத்மி வென்றுள்ளது.
பாஜக 99 இடங்களையும் காங்கிரஸ் 7 இடங்களை சுயேட்சைகள் 3 இடங்களையும் பிடித்துள்ளன.
வெற்றியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் “நாம் அனைவரும் டெல்லியை சுத்தமாகவும் அழகாகவும் மாற்ற வேண்டும்” என்று மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிரியா
நாளை எந்தெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்?
மின் இணைப்புடன் ஆதார்: வழக்கு நாளை ஒத்திவைப்பு!