“மகாராஷ்டிராவை கொள்ளையடிக்கும் பாஜக, ஏக்நாத் ஷிண்டே” – ஆதித்யா தாக்கரே காட்டம்!

Published On:

| By Minnambalam Login1

நடைபெற உள்ள மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என வோர்லி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே ஏ.என்.ஐ-க்கு இன்று(அக்டோபர் 24) அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நவம்பர் 20ஆம் தேதி நடக்கவிருக்கும் மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ், ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கொண்ட ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணியும், இவர்களுக்கு எதிராக பிஜேபி, ஷின்டேவின் சிவ சேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கொண்ட ‘மகாயுதி’ கூட்டணியும் போட்டியிடுகிறது.

இந்த இரு கூட்டணிக்குள்ளேயும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் குழப்பம் நிலவுகிறது.

இந்த நிலையில் ” ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளான காங்கிரஸ், ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா தலா 85 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது.

மற்ற தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. நாளை அவை இறுதி செய்யப்பட்டுவிடும்” என்று காங்கிரஸ் தலைவர் நானா படோல் நேற்று (அக்டோபர் 23) தெரிவித்தார்.

இந்த சூழலில், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா  65 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று (அக்டோபர் 23) அறிவித்தது. இதில் உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்யா தாக்கரே மும்பை வோர்லி தொகுதியில் போட்டியிடுவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், இந்த பட்டியலில் மொத்தம் உள்ள சிவ சேனாவின் (உத்தவ் தாக்கரே) 15 சிட்டிங் எம்.எல்.ஏ-களிலிருந்து 14 எம்.எல்.ஏகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதற்குப் பின்பு இன்று வோர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரே பேரணியாகச் சென்றபோது ஏ.என்.ஐ. க்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் “ மக்கள் எனக்கு நிச்சயமாக வாக்களிப்பார்கள். மகா விகாஸ் அகாதி கூட்டணிதான் அடுத்து ஆட்சி அமைக்க போகிறது” என்றார்.

தொகுதிப் பங்கீடு குறித்துக் கேட்டதற்கு “ தொகுதிப் பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும். அதைவிட மகாராஷ்டிராவைக் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிற பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டேவையும்  தோற்கடிப்பதுதான் முக்கியம்” என்றார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: சிவசங்கர் பேட்டி!

தீபாவளி… ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு லீவா?

தமிழ் தலைவாஸ் அட்டகாச வெற்றி… புனே அணி மண்ணை கவ்வியது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share