சென்னையில் கடந்த 6ஆம் தேதி அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ‘மன்னராட்சி’ என திமுகவை விமர்சனம் செய்திருந்தார்.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பலதரப்பில் இருந்தும் கேள்விகள் எழுந்தன.
இதனையடுத்து கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் நேற்று (டிசம்பர் 9) அறிவித்திருந்தார்.
விசிகவின் இந்த முடிவிற்குப் பதிலளிக்கும் விதமாக ஆதவ் அர்ஜுனா நேற்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ” தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன். ” என்று குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து என்னை நான் விடுவித்துக் கொள்கிறேன் என்று ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டது போல் ஒரு அறிக்கை சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆனால் ஆதவ் அர்ஜுனாவின் ஃபேஸ்புக், எக்ஸ் பக்கங்களில் அப்படி ஏதும் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இதன் மூலம் இந்த அறிக்கை பொய் என்று நிரூபணமாகியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சடாரென உயர்ந்த தங்கம், வெள்ளி விலை… அதிர்ச்சியில் மக்கள்!
திமுக முன்னாள் எம்.பி ரா.மோகன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்!
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு… வேலூரில் வறண்டு கிடக்கும் ஏரிகள்: என்ன காரணம்?