கடந்த சில நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.
இதுகுறித்து நமது மின்னம்பலம் தளத்தில், டிஜிட்டல் திண்ணை: பாட்னா டு பட்டினப்பாக்கம்… ஆதவ் அர்ஜுனாவின் ஆட்டத்தை மாற்றிய பிரசாந்த் கிஷோர் என்ற தலைப்பில் செய்தி நேற்று வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஆதவ் அர்ஜூனா இன்று (ஜனவரி 31) வருகை தந்துள்ளார். அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போன்று அதிமுக ஐடி பிரிவு இணை செயலாளராக இருந்த சி.டி.ஆர் நிர்மல் குமாரும் பனையூருக்கு வருகை தந்துள்ளார்.
அவர்கள் இருவரையும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.