விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடுகள் சமீபகால தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் அழுத்தமான தடங்களைப் பதித்து வருகின்றன. அந்த வகையில், இன்று (ஜனவரி 26) திருச்சியில், ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு, தேசிய அளவில் தனிக்கவனம் பெற்றுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமை வகிக்கிறார். இதில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுப் பேசுகின்றனர்.
பழைய நாடாளுமன்ற வாயில் வடிவிலான நுழைவாயில், முகப்பில் ஒளிரும் அம்பேத்கர், புத்தர் படங்கள், பரந்து விரிந்த மாநாட்டுத் திடல் என்று விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அரசியல் கட்சிகள் மாநாடு நடத்துவது வழக்கம்தான் என்றாலும் இப்படி ஒரு முறை ஒழுங்கமைவோடு நிறுவனத் தன்மையோடு கவனிக்க வைக்கும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை, ‘வாய்ஸ் ஆஃப் காமென்’ என்கிற நிறுவனம் செய்திருக்கிறது.
இந்த நிறுவனத்தின் தலைவரான ஆதவ் அர்ஜூனா தான் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக விசிகவின் விருது வழங்கும் விழா, விசிக சமீபத்தில் பிரமாண்டமாக நடத்திய பூத் ஏஜென்ட் கூட்டம் உள்ளிட்டவற்றை திட்டமிட்டு ஒருங்கிணைத்து வந்தவர். அவரது தலைமையிலான இந்த குழு தான் விசிகவின் அடுத்த பாய்ச்சலுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது என்கிறார்கள் மாநாட்டு வட்டாரங்களில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
”இசை சொல்லி கொடுத்ததே அவங்க தான்”… கலங்க வைக்கும் யுவன் வீடியோ!
ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள்!