திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்!

அரசியல்

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் விசிக தலைவரும், தற்போதைய சிதம்பரம் எம்.பி.யுமான திருமாவளவன் தலைமையில் மதமாற்ற தடுப்புச் சட்டத்தை கண்டித்து பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியின் போது கலவரம் ஏற்பட்டதால் திருமாவளவன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் ஆஜராகும்படி திருமாவளவனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில், இன்று (ஜூலை 31) வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமாரி விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

அதாவது வழக்கில் சம்மன் அனுப்பியும் திருமாவளவன்  ஆஜராகாமல் இருந்தது மற்றும் வழக்கறிஞர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அவர் தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்யாமல் இருந்தது ஆகிய காரணங்களை குறிப்பிட்டு இந்த பிடிவாரண்ட்டை நீதிபதி பிறப்பித்தார்.

தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திருமாவளவன் அதில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சட்னி சாம்பார் : விமர்சனம்!

ராகுல் காந்தியின் சாதி… ’அனுராக் சர்ச்சை பேச்சு : ஷேர் செய்த மோடி – காங்கிரஸ் பதிலடி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *