விஜயகாந்த் வாழ்க்கையை மாற்றிய ஒரே ஒரு டோஸ்!

அரசியல்

தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் காலமான நிலையில்  அவருக்கு பலர் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். பிரபலங்கள் மட்டுமல்ல, அவரோடு பழகிய ஒவ்வொருவருக்கும் அவருடனான நினைவுகள் உண்டு.

விஜயகாந்தின் உடல் நலம் கடந்த சில ஆண்டுகளாக குன்றியிருந்த நிலையில் அவர் சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

ரஜினிகாந்த் சிறுநீரகம் தொடர்பான சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று வந்தார். அதன் பிறகு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார்.  அதேபோல விஜயகாந்துக்கும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதையடுத்து சிங்கப்பூர் சென்றார்.

இது தொடர்பாக நடிகர் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தினர், “எப்போதுமே நடிகர் விஜயகாந்த் மீது தனி அன்பு கொண்டவர் ரஜினி. அதிலும் சிகிச்சை தொடர்பாக ரஜினி சிகிச்சை பெற்ற சிங்கப்பூர் மருத்துவமனையிலேயே விஜயகாந்தும் சிகிச்சை பெற்றதால் சிகிச்சை பற்றி விஜயகாந்திடம் அவ்வப்போது விசாரித்து வந்தார் ரஜினி.

ஒரு கட்டத்தில் விஜயகாந்த் தொடர் சிகிச்சைகளின் போது அவருக்கு வேறு சில பிரச்சினைகளும் சேர்ந்துகொண்டன. அவரால் பேச முடியாமல் போனது.

இது தொடர்பாக ரஜினி தனது நண்பர்களிடம் மனம் விட்டு பேசுகையில், ‘நானும் கடவுள் நம்பிக்கை நிறைந்தவன், விஜயகாந்தும் கடவுள் நம்பிக்கை நிறைந்தவர். அந்த சிங்கப்பூர் மருத்துவமனையில் எனக்கு கொடுத்த மருந்துதான் விஜயகாந்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. என் உடல் நிலைக்கு மருந்து செட் ஆகிவிட்டது. ஆனால் விஜயகாந்துக்கு அந்த மருந்தை ஒரு டோஸ் அதிகமாகக் கொடுத்துவிட்டார்களாம்.  அது விஜயகாந்த் உடல் நிலைக்கு செட் ஆகவில்லை. அதனால்தான் அவருக்கு பின்னாட்களில் நரம்புக் கோளாறில் கொண்டு போய்விட்டுவிட்டது’ என்று சொல்லி  வருந்தியிருக்கிறார்.

இதை இன்றைக்கும் சொல்லிச் சொல்லி வருத்தப்படுகிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்” என்கிறார்கள்.

வேந்தன்

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் : அரசியல் கட்சியினர், திரையுலகினர் நேரில் அஞ்சலி!

இரண்டு ஆண்டுகளாக உயிரோடு பார்க்க முயற்சி செய்தும்… இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்!

+1
0
+1
0
+1
2
+1
2
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *