ஜவாஹிருல்லாவுடன் காலால் ஒரு செல்ஃபி- யார் இவர்?

அரசியல் டிரெண்டிங்

மனித நேய மக்கள் கட்சித் தலைவரான ஜவாஹிருல்லாவை இன்று (மே 15)  சந்தித்த ஒருவர் காலால் செல்ஃபி  எடுத்துக் கொண்ட காட்சி கவனத்தை ஈர்த்து வருகிறது.’

கேரளா, கோழிக்கோடு மாவட்டம் வெளி மண்ணை கிராமத்தில் வசிக்கும் ஷஹீத் ஜம்ஷீரா தம்பதியரின் மூத்த மகன் ஆசீம்.

இவருக்கு பிறவியிலேயே இரண்டு கைகளும் கிடையாது. கேள்வித் திறன், பேசும் திறன் குறைபாட்டுடன் நடப்பதற்கே சிரமப்படும் 90 விழுக்காடு அங்கவீனம் கொண்ட ஒரு மாற்றுத்திறனாளி. 

படிப்பு; விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஆசீமின் முயற்சிகளுக்கு “வெளி மண்ணை பவுண்டேஷன்” எனும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்பட்டு வரும் அமைப்பு ஊக்கம் அளித்தது.

ஏற்கனவே கேரளா அரசின் பால புரஸ்கார் விருது. யூனிசெப் அமைப்பின் Child Achiever Award, கலாம் பவுண்டேஷன் வழங்கிய Inspiring Indian Achiever Award போன்ற பல விருதுகளை பெற்றுள்ள ஆசீம்,

சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு 39 நாடுகளைச் சேர்ந்த 169 பேர் அடங்கிய பட்டியலில் இருந்து இறுதி மூவரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு 2022 ஆம் ஆண்டு கௌரவிக்கப்பட்டவர்.

இந்த ஆசீம்தான் இன்று (மே 15) சென்னை மண்ணடியில் இருக்கும் தமுமுக தலைமையகத்தில் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஜவாஹிருல்லாவுடன் தன் காலாலேயே செல்ஃபி எடுத்துக் கொண்டார்  ஆசீம்,

வேந்தன்

கள ஆய்வுக்கு முக்கியத்துவம் :சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா”: குடியாத்தத்தில் ஆடிய பெண் காவலர்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *